/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
/
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
செங்கல்பட்டு : புகார் பெட்டி;சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
ADDED : ஜூலை 25, 2024 01:37 AM

சேதமடைந்த மின் கம்பம் கொல்லம்பாக்கத்தில் ஆபத்து
சித்தாமூர் அடுத்த கொல்லம்பாக்கம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் சாலை மற்றும் நியாய விலைக்கடை சாலையை இணைக்கும் பாதையில், குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மின் கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளதால், பலத்த காற்று வீசினால், குடியிருப்புப் பகுதியில் மின் கம்பம் முறிந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சேதமடைந்துள்ள மின்கம்பத்தை உடனே மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.முல்லைவேந்தன்,
சித்தாமூர்.
காற்றில் முறிந்த மின்கம்பம் திருக்கச்சூரில் தொடரும் இருள்
சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் பகுதியில், சாலை நடுவில் இருந்த மின் கம்பம், கடந்த வாரம் காற்றில் முறிந்து விழுந்தது.
இதன் காரணமாக, இரவில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், சாய்ந்த மின் கம்பம் அகற்றப்படாமல், விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கிடக்கிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாய்ந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைத்து விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மணிகண்டன்,சிங்கபெருமாள் கோவில்.
சாலையில் கொட்டப்படும் கழிவுநீர் திருப்போரூரில் அட்டூழியம்
திருப்போரூர் மீன் மார்க்கெட் எதிரே, தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் பாதை உள்ளது. இப்பாதையை, அப்பகுதி குடியிருப்புவாசிகளும், விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இரவு நேரத்தில், லாரிகளில் கழிவுநீர் எடுத்துவரும் மர்மநபர்கள், சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
↔- எம்.கிருஷ்ணன்,↔திருப்போரூர்.
பழையனுார் சாலை வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
படாளம் -- பூதுார் நெடுஞ்சாலையில், பழையனுார் ஊராட்சி உள்ளது. இங்கு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே, மிக ஆபத்தான சாலை வளைவு உள்ளது.
இப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், அதிவேகமாக சாலை வளைவை கடக்கின்றனர்.
இதனால், விபத்துகள் ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைப் பகுதியில் வேகத்தடை அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.மகேஷ்குமார்,மதுராந்தகம்.
சேதமடைந்த மினிடேங்க் குழாய் கரும்பாக்கத்தில் வீணாகும் தண்ணீர்
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்குஉட்பட்ட கரும்பாக்கம் கிராமத்தில், குடியிருப்பு பகுதி யில் பொதுமக்கள் பயன்பட்டிற்காக மினி டேங்க் அமைக்கப்பட்டது.
மினி டேங்க் தண்ணீரை, அப்பகுதியினர் துணிவைக்க, பாத்திரம் கழுவ மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இன்றி, நாளடைவில் மினி டேங்க் குழாய்கள் சேதமடைந்தன. அவை மீண்டும்சீரமைக்கப்படாததால், அப்பகுதிவாசிகள் மரக்கட்டைவைத்து குழாய்களை அடைத்து வருகின்றனர். இதனால்,அதிக அளவில் தண்ணீர் வீணாகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பழுதடைந்துள்ள மினி டேங்க் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.சரத்குமார்,செய்யூர்.