/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு:புகார் பெட்டி பயன்பாடில்லாத காரிய மண்டபம்
/
செங்கல்பட்டு:புகார் பெட்டி பயன்பாடில்லாத காரிய மண்டபம்
செங்கல்பட்டு:புகார் பெட்டி பயன்பாடில்லாத காரிய மண்டபம்
செங்கல்பட்டு:புகார் பெட்டி பயன்பாடில்லாத காரிய மண்டபம்
ADDED : ஜூன் 25, 2025 09:05 PM

பயன்பாடில்லாத காரிய மண்டபம்
பாக்கம் ஊராட்சியில் பாக்கம் காலனி, வயலுார், தாதங்குப்பம், புளிக்கொரடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், 2500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட, அஞ்சுரம்மன் கோவில் குளக்கரை பகுதியில், தாய் திட்டத்தின் கீழ் இறுதி சடங்கு செய்ய காரிய மண்டபம் கட்டப்பட்டது.
தற்போது, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும், திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, காரிய மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும்.
- - - கி.ராஜவேல், பாக்கம்.