/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; நெரும்பூர் சாலை சந்திப்பில் தடுப்புகள் அமைப்பது அவசியம்

ADDED : ஆக 22, 2024 12:16 AM

நெரும்பூர் சாலை சந்திப்பில் தடுப்புகள் அமைப்பது அவசியம்
திருக்கழுக்குன்றத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில், திருக்கழுக்குன்றம், சதுரங்கப்பட்டினம், நெரும்பூர் ஆகிய சாலைகள் இணைந்த சந்திப்பு உள்ளது.
இச்சந்திப்பு வழியாக, ஏராளமான வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த, அப்பகுதியில் எத்தகைய தடுப்புகளும், வேகத்தடைகளும் அமைக்கப்படவில்லை.
கட்டுப்பாடின்றி, தாறுமாறாக செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்துகளில் சிக்கி, உயிரிழப்பு சேதம் அதிக அளவில் ஏற்படுகிறது. இத்தகைய அபாயத்தை தவிர்க்க, சாலைகளை பிரித்து, தடுப்புகள், வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ஆர்.முத்துகிருஷ்ணன், செங்கல்பட்டு.