/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்

ADDED : நவ 27, 2024 11:49 PM

உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்
கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலையில், லேசாக மழை பெய்தாலும், மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில், குழந்தைகள் மையம் மற்றும் பள்ளிகள் உள்ளன.
இந்த சாலையை பயன்படுத்தி, பள்ளி செல்லும் மாணவர்கள் தினமும் அதிகமானோர் சென்று வருகின்றனர். இந்த தெருவில், மழைநீர் வடிகால்வாய் இருந்தும், சாலை பள்ளமாகவும், மழை நீர் வடிகால்வாய் மேடாகவும் இருப்பதால் மழை நீர் சீராக செல்லாமல் சாலையில் தேங்கியுள்ளது.
இதனால், சாலையை பயன்படுத்தி செல்லும் அனைவருக்கும் இடையூறாக உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மழை நீர் தேங்காமல் சீராக செல்ல, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பரமேஸ்வரி, கூடுவாஞ்சேரி.