/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி; திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு: புகார் பெட்டி; திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்
ADDED : மே 23, 2024 12:58 AM

திறந்தவெளி கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அருகே மருவளம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில், 2019ம் ஆண்டு திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.
கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு தினசரி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கிணற்றின் மேல் தளத்தில் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதால், கிணற்றில் பாசி படர்ந்து, பறவைகளின் கழிவுகள் கலப்பதாக கூறப்படுகிறது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கிணற்றுக்கு மூடி அமைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
- ஆ.சிவக்குமார், சித்தாமூர்.
அறிவிக்கப்படாத மின் வெட்டு ஊரப்பாக்கத்தில் அவஸ்தை
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர், ராஜிவ்காந்தி நகர், கிளாம்பாக்கம், அருள் நகர் பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது.
இதனால், இப்பகுதிவாசிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், மின்தடை ஏற்படுவது தொடர்கிறது.
எங்கள் பகுதிக்கு, சீரான மின் வினியோகம் வழங்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- எஸ்.சாந்தலட்சுமி, ஊரப்பாக்கம்.
வழிகாட்டி பலகையை மறைத்து போஸ்டர் ஒட்டி அட்டூழியம்
மாமல்லபுரத்தில், பூஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழி அறிய, மருத்துவமனை அருகில், திருக்கழுக்குன்றம் சாலையில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.
புதியவர்கள் அதை கண்டு, மருத்துவமனை செல்வர். இதில், சுவரொட்டி, துண்டு பிரசுரம் ஆகியவற்றை ஒட்டி, பெயர்ப்பலகை நிரந்தரமாக மறைக்கப்பட்டுள்ளது.
அதனால், மருத்துவமனைக்கு வரும் புதியவர்கள், வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, அதில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.சங்கரலிங்கம், மாமல்லபுரம்.
மாம்பாக்கம் - பொன்மார் சாலை அகலப்படுத்தப்படுமா?
திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம்- - பொன்மார் இடையே, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகள், வணிக கடைகள் உள்ளதால், போக்குவரத்து அதிகரித்துள்ளது.
இச்சாலை வழியாக, தினமும் ஏராளமானோர்பயணிக்கின்றனர். இந்நிலையில், சாலை குறுகிய நிலையில் உள்ளதால், வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும்போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மாம்பாக்கம்- - பொன்மார் சாலையை விரிவாக்கம் செய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.கிருஷ்ணமூர்த்தி, மாம்பாக்கம்.
கொளத்துார் வேகத்தடைக்கு வண்ணம் பூச கோரிக்கை
சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை, கொளத்துார் பகுதியில், அடுத்தடுத்து மூன்று வேகத் தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வண்ணம் பூசப்படாததால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுவது தொடர்கிறது.
எனவே, இந்த வேகத்தடைகளுக்கு வண்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.பூபதி, பாலுார்.

