/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி ;சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி ;சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு: புகார் பெட்டி ;சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
செங்கல்பட்டு: புகார் பெட்டி ;சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 10, 2025 02:11 AM

சேதமடைந்த சாலை சீரமைக்க கோரிக்கை
திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணகப்பட்டு பகுதியில் 2 கி.மீ., துாரம் வீராணம் சாலை உள்ளது. இந்த சாலை திருப்போரூர் - இள்ளலுார் சாலை மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கிறது.
இச்சாலையை ஒட்டி கிழக்கு பகுதியில் வீடுகளும், மேற்கு பகுதியில் விவசாய நிலங்கள், மனைபிரிவுகள் உள்ளன.
இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இள்ளலுார், வெண்பேடு, காட்டூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து கேளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்கின்றனர்.
இச்சாலையில் கடந்த ஓராண்டாக சில இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
மேலும், சாலை குறுக்கே அமைக்கப்பட்ட உருளை குழாய் உடைந்து, அபாய பள்ளமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், தினமும் சாலையில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.