/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை

ADDED : பிப் 22, 2024 01:12 AM
தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் கேம்ப் ரோடில், ஐ.ஓ.பி., காலனி - சுந்தரம் காலனி சந்திக்கும் இடத்தில், சிக்னல் மற்றும் போக்குவரத்து போலீசார் இல்லாததால், காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான விபத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் அதிகமானோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தில் தானியங்கி சிக்னல் அல்லது காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.ஆர்.பார்த்தசாரதி,
கேம்ப் ரோடு, சேலையூர்.