/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;வீரபோகம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
செங்கல்பட்டு: புகார் பெட்டி;வீரபோகம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு: புகார் பெட்டி;வீரபோகம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
செங்கல்பட்டு: புகார் பெட்டி;வீரபோகம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 21, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபோகம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி
செய்யூர் அருகே சீக்கனாங்குப்பம் கிராமத்தில், வேலுார் வழியாக வீரபோகம் செல்லும் தார் சாலை உள்ளது.
இச்சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மேலும், இப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.
வளைவுப்பகுதியில் சாலை சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சு.அரவிந்தன்,
செய்யூர்.