/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா நெல் விற்பனை செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு
/
கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா நெல் விற்பனை செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு
கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா நெல் விற்பனை செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு
கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா நெல் விற்பனை செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : அக் 07, 2025 11:39 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில நெல் இரவு நேரத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1.86 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
அனுமதி தற்போது, சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில், நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டார்.
விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,545 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,500 ரூபாய் நிர்ணயம் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும். குறைபாடு கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உத்தரவு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலை களுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் 77 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
தற்போது இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - வி.சி., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஆந்திர மாநில நெல் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, இரவு நேரத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.