/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மற்ற மாநிலங்களைவிட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னைதான்'
/
'மற்ற மாநிலங்களைவிட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னைதான்'
'மற்ற மாநிலங்களைவிட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னைதான்'
'மற்ற மாநிலங்களைவிட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் சென்னைதான்'
ADDED : பிப் 12, 2025 12:30 AM

சென்னை, சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு மைதானத்தில், குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பில், சிறப்பு இல்லங்களில் பயிலும் மாணவ - மாணவியருக்கான, மாநில விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கின.
இதை துவக்கி வைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சென்னையில் அளித்த பேட்டி:
பெண்கள் புகார் கொடுக்க முன் வருவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில், பெற்றோர் பெயரை கெடுக்க வேண்டாம் எனக் கருதி, பாதிப்புகளை வெளியில் சொல்லாமல் இருந்தனர். தற்போது, பெண்கள், குழந்தைகளிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, புகார் கொடுக்க முன் வருகின்றனர். இதனால் நிறைய புகார்கள் வருகின்றன.
காவல்துறையுடன் கல்வித்துறை இணைந்துதான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். புகார் தருவோர் குறித்த தகவல்கள் வெளியே வராது என்ற உறுதியை அளிக்கிறோம்.
அண்ணா பல்கலை புகார் தொடர்பான விபரங்கள் மட்டுமே வெளி வந்துள்ளது. அதுதவிர, வேறு எதுவும் வெளியே வரவில்லை. தகவல் வெளியானதற்கு தமிழக அரசு காரணமல்ல.
'சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை' என, கவர்னர் தெரியாமல் கூறுகிறார்; தெரிந்தும் தெரியாததுபோல் கூறுகிறார்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, சென்னைதான் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. பிற மாநிலங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்துள்ள பெண்கள், சென்னையில் படித்து, வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

