/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் கடலில் மூழ்கி சென்னை மாணவர்கள் பலி
/
கல்பாக்கம் கடலில் மூழ்கி சென்னை மாணவர்கள் பலி
ADDED : ஜன 01, 2025 08:41 PM
புதுப்பட்டினம்,:கல்பாக்கம் கடலில் குளித்த சென்னை மாணவர்கள், அலையில் சிக்கி இறந்தனர்.
சென்னை, திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்த மீனவர் மகேஷ் மகன்கள் நிவாஸ், 16, மற்றும் நித்திஷ், 14.
அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் முறையே, 10ம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படித்தனர். பள்ளி விடுமுறைக்காக, கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர்.
நேற்று மாலை, 4:30 மணியளவில், கல்பாக்கம் நகரியம், பகிங்ஹாம் கால்வாய் முகத்துவார பகுதி கடலில், இவர்கள் குளித்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி மூழ்கினர்.
சற்று நேரத்தில் இவர்களின் சடலங்கள், அதே பகுதியில் கரை ஒதுங்கி உள்ளன.
இதுகுறித்து அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி வந்த கல்பாக்கம் போலீசார், இரு மாணவர்களின் உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

