/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செட்டிப்புண்ணியம் கல்குவாரி குடிநீர் திட்டத்திற்கு... பரிந்துரை! : ரூ.40.80 கோடி கேட்டு அரசுக்கு நகராட்சி கருத்துரு
/
செட்டிப்புண்ணியம் கல்குவாரி குடிநீர் திட்டத்திற்கு... பரிந்துரை! : ரூ.40.80 கோடி கேட்டு அரசுக்கு நகராட்சி கருத்துரு
செட்டிப்புண்ணியம் கல்குவாரி குடிநீர் திட்டத்திற்கு... பரிந்துரை! : ரூ.40.80 கோடி கேட்டு அரசுக்கு நகராட்சி கருத்துரு
செட்டிப்புண்ணியம் கல்குவாரி குடிநீர் திட்டத்திற்கு... பரிந்துரை! : ரூ.40.80 கோடி கேட்டு அரசுக்கு நகராட்சி கருத்துரு
ADDED : ஜன 28, 2025 07:55 PM

செங்கல்பட்டு:செட்டிப்புண்ணியம் கல் குவாரி குட்டையில் இருந்து, மறைமலைநகர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு, 40.80 கோடி ரூபாய் நிதி கேட்டு, நகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சிறப்பு நிலை நகராட்சி, 58.8 சதுர கி.மீ., பரப்பளவில் உள்ளது. இதில் உள்ள 21 வார்டுகளில், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 81,316 பேர் உள்ளனர். தற்போது, ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் உள்ளனர்.
இவர்களின் தேவைக்காக, பாலாறு குடிநீர் மற்றும் உள்ளூர் கிணறுகள் வாயிலாக, தினமும், 1,025 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்படுகிறது.
அவற்றில் இருந்து நகரவாசிகளுக்கு தினமும், ஒரு நபருக்கு 108 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, சென்னையின் புறநகர் பகுதியாக உள்ளதால், குடியிருப்புகள் அதிகரித்து, மக்கள் தொகையும் பெருகி வருவதால், குடிநீரின் தேவை அதிகரித்து வருகிறது.
இதனால், பற்றாக்குறை சமாளிக்க, செட்டிப்புண்ணியம் கல் குவாரி குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத்திற்கு செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு அடுத்த செட்டிப்புண்ணியம் ஊராட்சியில், கடந்த 2006ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை, 100 ஏக்கருக்கும் மேல் கல் குவாரி இயங்கியது.
குவாரியில் பல அடி வரை கல் எடுத்ததால், பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதனால், குவாரியை மூட வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கல் குவாரி மூடப்பட்டது.
இந்த கல்குவாரி, 400 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்டது. இந்த கல்வாரி குட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்த தண்ணீரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பகுப்பாய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின், குடிநீர் பயன்பாட்டிற்கு உகந்தது என, நகராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதையடுத்து, குவாரி குட்டைகளில் உள்ள நீரை சுத்திகரிப்பு செய்து, நகராட்சியின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
இந்த திட்ட அறிக்கையில், கல் குவாரி குட்டைகளில் சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, குழாய் வாயிலாக தினமும், 1 கோடியே 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து, செட்டிப்புண்ணியம் - மறைமலைநகர் நகராட்சி இடையே 12 கி.மீ., துாரத்திற்கு குழாய் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய, 40.80 கோடி ரூபாய் நிதி கேட்டு, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர், அரசுக்கு இந்த கருத்துருவை, நகராட்சி நிர்வாகம் கடந்த நவம்பரில் அனுப்பி உள்ளது. தமிழக அரசு நிதி ஒதுக்கியதும், இத்திட்டம் துவக்கப்படும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மறைமலைநகர் நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக, செட்டிப்புண்ணியம் கல் குவாரி குட்டைகளில் உள்ள தண்ணீரை, குடிநீருக்கு பயன்படுத்தலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்தனர். இத்திட்டத்தை செயல்படுத்த, திட்ட அறிக்கை தயார் செய்து, 40.80 கோடி ரூபாய் நிதி கேட்டு, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், இந்த குடிநீர் திட்டம் துவக்கப்படும்.
-ரமேஷ்,
கமிஷனர்,
மறைமலை நகர் நகராட்சி.