/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு திருப்போரூரில் துவக்கம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு திருப்போரூரில் துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு திருப்போரூரில் துவக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு திருப்போரூரில் துவக்கம்
ADDED : ஆக 27, 2025 09:09 AM

திருபோரூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, நேற்று துவங்கி, செப்., 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், திருப்போரூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில் நடைபெற உள்ளன.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஐந்து பிரிவுகளில், 37 விளையாட்டுகள் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்க, 16,221 பள்ளி மாணவர்கள், 6,951 கல்லுாரி மாணவர்கள், 717 மாற்றுத்திறனாளிகள், 744 அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவில் 14,018 நபர்கள் என, மொத்தம் 38,651 பேர் பதிவு செய்துள்ளனர்.
நேற்று துவங்கிய இப்போட்டியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், திருப்போரூர் ஒன்றிய குழுத் தலைவர் இதயவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.