/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாத்திரம் தலையில் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு
/
பாத்திரம் தலையில் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு
பாத்திரம் தலையில் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு
பாத்திரம் தலையில் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்பு
ADDED : ஏப் 25, 2025 01:42 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு, சின்னமணியக்கார தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார், 28.
இவரது மூன்று வயது மகள் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அலுமினிய பாத்திரங்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது, எதிர்பாராத விதமாக அலுமினிய பாத்திரம், குழந்தையின் தலையின் மேல் பகுதியில் சிக்கிக் கொண்டது.
நீண்ட நேரமாக முயன்றும் பாத்திரத்தை எடுக்க முடியாததால் குழந்தையை, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
உடனே தீயணைப்பு வீரர்கள், தங்களிடம் இருந்த பிரத்யேக கருவிகளை பயன்படுத்தி, அலுமினிய பாத்திரத்தை வெட்டி எடுத்து, குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.