/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுாரில் சிறுவர் பூங்காவுக்கு பூட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் குழந்தைகள்
/
வண்டலுாரில் சிறுவர் பூங்காவுக்கு பூட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் குழந்தைகள்
வண்டலுாரில் சிறுவர் பூங்காவுக்கு பூட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் குழந்தைகள்
வண்டலுாரில் சிறுவர் பூங்காவுக்கு பூட்டு ஏமாற்றத்துடன் திரும்பும் குழந்தைகள்
ADDED : டிச 13, 2024 02:15 AM

கூடுவாஞ்சேரி,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.
இந்த பூங்காவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பொதுமக்கள், பூங்காவில் உள்ள அனைத்து உயிரினங்களையும் கண்டு ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.
வார விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வரும் பெற்றோர்கள், இந்த பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகளை விளையாட வைப்பர். இங்கு, ஐந்து வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக, அதிக அளவில் விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
ஆனால் தற்போது, இந்த சிறுவர் பூங்கா பூட்டப்பட்டு உள்ளது.
எனவே, உயிரியல் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் பயன்பாட்டிற்காக, இந்த பூங்காவை திறக்க வேண்டுமென, பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வண்டலுார் உயிரியல் பூங்கா நுழைவாயில் பகுதியிலுள்ள சிறுவர் பூங்காவில், குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், ஐந்து வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, இது பிடித்தமான விளையாட்டுகள் நிறைந்த சிறுவர் பூங்காவாக விளங்கி வந்தது.
குழந்தைகளுக்கு வாத்து, ஊஞ்சல், சறுக்கு மற்றும் யானை சிலை மீது ஏறி சாகசம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பூங்காவில் உள்ளன.
குடும்பத்துடன் வரும் பெற்றோர்கள், குழந்தைகளுடன் சென்று இந்த பூங்காவை சுற்றி வருவதற்கு, ஒரு மணி நேரம் வரை ஆகும். சில நாட்களாக இந்த பூங்கா, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.
இது குறித்து, பூங்கா ஊழியர்களிடம் கேட்டால் சரியான தகவல் இல்லை. இதனால், வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் வருவோர் குழந்தைகளுடன் சென்று வர முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
எனவே, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவை மீண்டும் திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

