/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சின்னவெண்மணி சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அபாய பயணம்
/
சின்னவெண்மணி சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அபாய பயணம்
சின்னவெண்மணி சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அபாய பயணம்
சின்னவெண்மணி சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அபாய பயணம்
ADDED : ஜன 08, 2025 10:09 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்தில் இருந்து ஓணம்பாக்கம் செல்லும், 5 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
சின்னவெண்மணி, மலைமேடு, ஓணம்பாக்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களுக்குச் செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது.
இச்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது, பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் சேதமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், விவசாய வேலைக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கடுமையாக சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.