/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் வெளியேறும் கழிவுநீரால் ஆபத்து
/
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் வெளியேறும் கழிவுநீரால் ஆபத்து
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் வெளியேறும் கழிவுநீரால் ஆபத்து
சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் வெளியேறும் கழிவுநீரால் ஆபத்து
ADDED : பிப் 09, 2024 10:16 PM

சித்தாமூர்:சித்தாமூர் பஜார் பகுதியில், பி.டி.ஓ., அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி வள மையம், வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், அரசு மாணவியர் விடுதி, நுாலகம், தபால் நிலையம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பல்வேறு வேலைகளுக்காக, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தின் செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வதால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால், அரசு மாணவியர் விடுதி, வேளாண் விரிவாக்க மையம், வட்டார கல்வி வள மையம் போன்ற அலுவலகங்களுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.