/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பி.டி.ஓ., வளாகம் குளமாக மாறிய அவலம்
/
சித்தாமூர் பி.டி.ஓ., வளாகம் குளமாக மாறிய அவலம்
ADDED : அக் 27, 2024 01:01 AM

சித்தாமூர்:சித்தாமூர் பஜார் பகுதியில் பி.டி.ஓ., அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி வள மையம், வேளாண் விரிவாக்க மையம், அரசு மாணவியர் விடுதி, நுாலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்த வளாகத்தில், 2015ம் ஆண்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. வடிகால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கும்.
தற்போது பெய்த மழையின் காரணமாக, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மழைநீர் குளம் போல தேங்கி உள்ளது. இதனால், மாணவியர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வருவோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.