ADDED : டிச 26, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்திருப்போரூர் ஒன்றியத்தில், கிறிஸ்துமஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருப்போரூர் அடுத்த, கோவளம் கார்மேல் மாதா ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ பிறப்பு பாடல்கள் பாடினர். இயேசு கிறிஸ்து பிறப்பின் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
திருப்போரூர், கண்ணகப்பட்டு, தண்டலம், கேளம்பாக்கம், கரும்பாக்கம், மானாமதி உட்பட அனைத்து தேவாலயங்களிலும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலை, 4:00 மணி முதல், ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை துவங்கியது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, குழந்தைகளுடன் வந்து, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

