/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிட்டி கால்பந்து போட்டி எம்.சி.சி., அணி அபாரம்
/
சிட்டி கால்பந்து போட்டி எம்.சி.சி., அணி அபாரம்
ADDED : பிப் 05, 2025 01:47 AM
சென்னை சென்னையின் எப்.சி., -- இங்கிலாந்து நார்விச் சிட்டி எப்.சி., கிளப்புகள் இணைந்து, சிட்டி பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடத்தி வருகின்றன.
இதில், யு - 12, யு -- 14 பிரிவினருக்கு மட்டும் போட்டிகள் நடக்கின்றன. 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், இருபிரிவிலும் தலா 32 அணிகள் என, மொத்தம் 64 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் மாலை நடந்த 'லீக்' ஆட்டங்களில், 12 வயது பிரிவில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மற்றும் மயிலாப்பூர் வித்யா மந்திர் சீனியர் பள்ளிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இருந்து, கடைசி பாதி ஆட்டங்கள் வரை, எம்.சி.சி., பள்ளி ஆதிக்கம் செலுத்தி, 7 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி, 4 - 2 என்ற கணக்கில் அரும்பாக்கம் முகமது சதக் பள்ளியை வீழ்த்தியது.
அதேபோல், 14 வயது பிரிவில், எம்.சி.சி., பள்ளி, 5 - 0 என்ற கோல் கணக்கில், மயிலாப்பூர் வித்யா மந்திர் சீனியர் பள்ளியை தோற்கடித்து அசத்தியது.
இருபிரிவிலும், எம்.சி.சி., பள்ளி புள்ளிகளை முன்னிலையில் தக்க வைத்து வருகிறது. போட்டிகள், தொடர்ந்து இம்மாதம் இறுதி வரை நடக்கின்றன.