/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புத்துார் சாலைக்கு விடிவு ரூ. 2.62 கோடியில் சீரமைப்பு
/
புத்துார் சாலைக்கு விடிவு ரூ. 2.62 கோடியில் சீரமைப்பு
புத்துார் சாலைக்கு விடிவு ரூ. 2.62 கோடியில் சீரமைப்பு
புத்துார் சாலைக்கு விடிவு ரூ. 2.62 கோடியில் சீரமைப்பு
ADDED : ஜன 28, 2024 04:08 AM

செய்யூர்: செய்யூர் அருகே அம்மனுார் கிராமத்தில் இருந்து, புத்துார் வழியாக செய்யூர் - சித்தாமூர் சாலையை இணைக்கும், 3.3 கிலோமீட்டர் அளவிலான தார்ச்சாலை உள்ளது.
செங்காட்டூர், புத்துார், அம்மனுார், உவிராலுார் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர், விவசாயிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை பழுதடைந்து, மேடுபள்ளமாக மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அப்பகுதியினர் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.3 கிலோமீட்டர் துாரத்திற்கு சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது, சாலையின் இடையே கால்வாயை கடக்கும், ஏழு சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.