/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகுதிநேர நூலகங்கள் மூடல் வாசகர்கள் பெரிதும் பாதிப்பு
/
பகுதிநேர நூலகங்கள் மூடல் வாசகர்கள் பெரிதும் பாதிப்பு
பகுதிநேர நூலகங்கள் மூடல் வாசகர்கள் பெரிதும் பாதிப்பு
பகுதிநேர நூலகங்கள் மூடல் வாசகர்கள் பெரிதும் பாதிப்பு
ADDED : ஜன 27, 2024 01:07 AM
சென்னை:சென்னையின் புறநகர் பகுதியான நீலாங்கரை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், பெரும்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கேளம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதியில், 60க்கும் மேற்பட்ட பகுதி நேர நுாலகங்கள் உள்ளன.
தினமும், இரண்டு மணி நேரம் திறக்க வேண்டும். நாளிதழ் வாங்க, நுாலகத்துறை நிதி ஒதுக்குகிறது. ஆனால், பெரும்பாலான பகுதி நேர நுாலகங்களில், நாளிதழ்கள் வாங்குவதில்லை.
வாசிப்பு மீது ஆர்வம் உடைய சில வாசகர்கள், அவர்களே பணம் செலுத்தி, சில நாட்கள் நாளிதழ் வாங்கி கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், நுாலகங்கள் திறக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
வாசகர்கள் கூறுகையில், ''மிக்ஜாம்' மழை வெள்ளம் புகுந்த நுாலகங்களை சுத்தம் செய்யாமல், அதையே காரணம் காட்டி திறக்கவில்லை. நுாலக வரி செலுத்தியும் எந்த பயனும் இல்லை. அதிகாரிகள், உரிய ஆய்வு செய்ய வேண்டும்' என்றனர்.
நுாலக அதிகாரிகள் கூறுகையில், 'சில தற்காலிக ஊழியர்களின் அலட்சியத்தால், நுாலகங்கள் திறக்காதது உண்மை தான். நுாலகத்தை முறையாக பராமரிக்காத ஊழியர்களை மாற்ற முடிவு செய்துள்ளோம். புதிய நுாலகங்களை திறக்க கூறும் உயர் அதிகாரிகள், நாளிதழ்கள் வாங்க பணம் ஒதுக்குவதில்லை' என்றனர்.

