/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு நிறுவன கடன் நிலுவை 12ம் தேதி வரை கால அவகாசம்
/
கூட்டுறவு நிறுவன கடன் நிலுவை 12ம் தேதி வரை கால அவகாசம்
கூட்டுறவு நிறுவன கடன் நிலுவை 12ம் தேதி வரை கால அவகாசம்
கூட்டுறவு நிறுவன கடன் நிலுவை 12ம் தேதி வரை கால அவகாசம்
ADDED : மார் 04, 2024 06:36 AM
செங்கல்பட்டு : கூட்டுறவு நிறுவனங்களில், பண்ணை சாரா கடன் நிலுவைகளை செலுத்த, வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில், வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்களை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு, 2022ம் ஆண்டு, டிச., 31ம் தேதி முடிவடைந்தது.
கடன் தவணை தவறி, 2023ம் ஆண்டு டிச., 13 தேதியில், நிலுவையில் உள்ள கடன்களுக்கு, வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் வரை, அசலுக்கு ஒன்பது சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும்.
இதன்படி, கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என, தமிழக அரசு ஆணை வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, நகர கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் என, மொத்தம் 105 கூட்டுறவு நிறுவனங்களில், கடந்த 2ம் தேதி, சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடந்தது.
பண்ணை சாரா கடன் பெற்று, கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையில் இருந்த பயனாளிகள், சிறப்பு முகாமில் பங்கேற்று, கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினம் மற்றும் வட்டி தள்ளுபடி குறித்த விபரங்களை தெரிந்துகொண்டனர்.
கடன் பெற்ற பயனாளிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள, வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

