/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை கடற்கரை கோவிலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
/
மாமல்லை கடற்கரை கோவிலில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 21, 2024 02:59 AM
மாமல்லபுரம், கல்பாக்கத்தில், அணுசக்தி தொழில் வளாகம் அமைந்துள்ள நிலையில், இப்பகுதி கடலோர பாதுகாப்பு இன்றியமையாதது.
இதையடுத்து, தமிழகம், புதுச்சேரி நேவல் கமாண்டிங் பிளேக்ஆபீசர் சார்பில், 'சீ விஜில்' கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை, நேற்று துவக்கப்பட்டது.
தேசிய, மாநில பாதுகாப்பு படையினர், தமிழகபோலீசார், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதி களை, தீவிரமாக கண் காணித்தனர்.
புதுச்சேரி சாலையில்சென்ற வாகனங்களில் சோதனை நடத்தினர். ேநற்று காலை 8:30 மணிக்கு, மாமல்லபுரம்புறவழிச்சாலை சந்திப்பில், புதுச்சேரி பேருந்திலிருந்து இறங்கிய நான்கு பேர், மாமல்லபுரம் நகர்ப் பகுதிக்கு நடந்து சென்றனர்.
கங்கைகொண்டான் மண்டப சந்திப்பு அருகில் சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக இருந்த அவர்களை, போலீசார் மடக்கி விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் பாதுகாப்பு ஒத்திகைக்காக, சென்னையிலிருந்துஅனுப்பப்பட்ட சுங்கத்துறை ஆய்வாளர், கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பேர்என்பது தெரிந்தது.

