/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் சரிந்த அலங்கார வளைவு
/
மாமல்லையில் சரிந்த அலங்கார வளைவு
ADDED : ஜன 02, 2026 05:14 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், தற்காலிக அலங்கார வளைவு சரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரத்தில், நகராட்சி அலுவலக பகுதி, முக்கிய சாலைகளின் சந்திப்பாக உள்ளது.
உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, சுற்றுலா வாகனங்களும் இந்த சந்திப்பை கடந்து தான், பல பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்திய நாட்டிய விழா, தற்போது இங்கு நடந்து வரும் நிலையில், சுற்றுலா பயணியரை கவரும் வகையில், இச்சந்திப்பில் தற்காலிக அலங்கார வளைவை, சுற்றுலாத் துறை அமைத்துள்ளது.
இரும்பு சட்டத்தில், 'பிளக்ஸ்' ஒட்டி அமைக்கப்பட்ட இந்த வளைவு, நேற்று காலை 10:30 மணியளவில், திடீரென சரிந்து ஒருபுறமாக சாய்ந்தவாறு நின்றது.
இதனால், அவ்வழியே சென்றவர்கள் அலறியடித்து, விலகி ஓடினர். சாலையில் விழுந்திருந்தால், பயணியர் மற்றும் வாகனங்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நடக்கவில்லை. அதன் பின், சுற்றுலாத் துறையினர், அதை அகற்றினர்.

