sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு

/

பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு


ADDED : செப் 24, 2024 06:57 PM

Google News

ADDED : செப் 24, 2024 06:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:வடகிழக்கு பருவமழையையொட்டி, ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், திறந்த கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதன்பின், குழாய் இணைப்புகள் வாயிலாக, தினமும் குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்யவேண்டும்.

ஊராட்சிகளில், இரண்டு முறை குடிநீர் வினியோகம் செய்தாலும், குளோரின் கலந்து தான் வினியோகம் செய்ய வேண்டும். குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஒருவர், நீர்த்தேக்க தொட்டியை இயக்குபவர், தொட்டியை துாய்மையாக பராமரிக்க ஒரு துாய்மை பணியாளர் ஆகியோர், ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டும் இன்றி, மேல்நிலை தொட்டிகளை, 15 நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட நாள், சுத்தம் செய்யப்பட வேண்டிய நாள் ஆகியவற்றை, மேல்நிலை தொட்டி பகுதியில் எழுதிவைக்க வேண்டும்.

மேல்நிலை தொட்டிகள் உள்ள பகுதியில், முட்செடிகள் இல்லாமல், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு வசதியாக, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது, ஊராட்சி நிர்வாகத்தின் கட்டாய கடமையாகும். ஆனால், சூணாம்பேடு, மாமண்டூர், ஊரப்பாக்கம், பாலுார், புதுப்பாக்கம், நென்மேலி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சி நிர்வாகத்தினர், சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வடகிழக்கு பருவ மழையையொட்டி, பொதுமக்களுக்கு குளோரினேட் செய்யப்பட்ட, பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.

அதற்கு, அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும், அவ்வப்போது குளோரினேட் செய்யப்பட வேண்டும் என, அனைத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், கலெக்டர் அருணராஜ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அடுத்து, ஊராட்சிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், பிரதி மாதம் 5ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில், சுத்தம் செய்து குளோரினேட் செய்யப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நீர்த்தேக்க தொட்டிகளை, இயக்குபவரை தவிர, வேறு யாரும் நெருங்கா வகையில் பாதுகாக்க, சுற்றிலும் வேலி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பம்ப் ரூம் ஸ்விட்ச்சுகள் நீர்க்கசிவு இன்றி, பாதுகாப்பான முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பணிகளை செய்ய, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவ மழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து ஊராட்சிகளிலும், குளோரினேட் செய்யப்பட்ட குடிநீர் மட்டுமே வினியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, குடிநீர் தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்யவும், ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us