/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
/
பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
பாதுகாப்பான குடிநீர் வினியோகம் ஊராட்சிகளுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 25, 2024 05:54 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும், குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஒருவர், நீர்த்தேக்க தொட்டியை இயக்குபவர், தொட்டியை துாய்மையாக பராமரிக்க ஒரு துாய்மை பணியாளர் ஆகியோர், ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சிகளில், இரண்டு முறை குடிநீர் வினியோகம் செய்தாலும், குளோரின் கலந்து தான் வினியோகம் செய்ய வேண்டும்.
இதுமட்டும் இன்றி, மேல்நிலை தொட்டிகளை, 15 நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட நாள், சுத்தம் செய்யப்பட வேண்டிய நாள் ஆகியவற்றை, மேல்நிலை தொட்டி பகுதியில் எழுதிவைக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டியது, ஊராட்சி நிர்வாகத்தின் கட்டாய கடமையாகும். ஆனால், சூணாம்பேடு, மாமண்டூர், ஊரப்பாக்கம், பாலுார், புதுப்பாக்கம், நென்மேலி உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சி நிர்வாகத்தினர், சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையையொட்டி, பொதுமக்களுக்கு குளோரினேட் செய்யப்பட்ட, பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
அதற்கு, அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும், அவ்வப்போது குளோரினேட் செய்யப்பட வேண்டும் என, அனைத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும், கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து, ஊராட்சிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும், பிரதி மாதம் 5ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில், சுத்தம் செய்து குளோரினேட் செய்யப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.