/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுங்கச்சாவடிகளில் நெரிசலை சீரமைக்க கலெக்டர் உத்தரவு
/
சுங்கச்சாவடிகளில் நெரிசலை சீரமைக்க கலெக்டர் உத்தரவு
சுங்கச்சாவடிகளில் நெரிசலை சீரமைக்க கலெக்டர் உத்தரவு
சுங்கச்சாவடிகளில் நெரிசலை சீரமைக்க கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 29, 2024 08:03 PM
செங்கல்பட்டு:சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, வாகனங்களை விரைந்து அனுப்ப அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ், உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுப்பாக்கம் அடுத்த, ஆத்துார் ஆகிய பகுதியில், சுங்கச்சாவடிகள் உள்ளன.
இதன் வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கும், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகின்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி, சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை கட்படுத்த இருசக்கர வாகனங்களுக்கு தனிபாதை அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பயணியர் நிழற்குடை அமைத்து, பேருந்துகளின் வருகை குறித்து, ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்பின், சுங்கச்சாவடியில், கலெக்டர் அருண்ராஜ், ஆய்வு செய்து, நிருபர்களிடம் கூறியதாவது;
பரனுார் சுங்கச்சாவடி முதல், ஆத்துார் சுங்கச்சாவடிவரை நாளொன்றுக்கு சுமார் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, வாகனங்களை விரைந்து அனுப்ப வேண்டும். குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் பயணியர் வசதிக்குகேற்ப செய்துதர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, சப் - கலெக்டர் நாராயணசர்மா, டி.எஸ்.பி., புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.