/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உய்யாலிகுப்பத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு சமாதான கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
/
உய்யாலிகுப்பத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு சமாதான கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
உய்யாலிகுப்பத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு சமாதான கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
உய்யாலிகுப்பத்தில் சாலை அமைக்க எதிர்ப்பு சமாதான கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 25, 2024 01:44 AM

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனவர் பகுதி மற்றும் வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட உய்யாலிகுப்பம் மீனவர் பகுதிகள், அடுத்தடுத்து உள்ளன.
புதுப்பட்டினம் மீனவ பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து, வாயலுார் மீனவ பகுதிக்கு உட்பட்டதாக கூறப்படும் பழைய ஊத்துக்காட்டம்மன் கோவில் பகுதி வரை, ஒன்றியக்குழு நிதியில், கான்கிரீட் சாலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.
புதுப்பட்டினம் எல்லை வரை சாலைப் பணிகள் நடந்து, உய்யாலிகுப்பத்திற்கும் சாலையை நீட்டித்து அமைக்க முயற்சிக்கப்பட்டது. புதுப்பட்டினம் சாலையை, தங்கள் பகுதியில் நீட்டிக்கக் கூடாது என, உய்யாலிகுப்பம் மீனவர்கள் எதிர்த்தனர்.
வருவாய்த் துறையினர் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் சாலை அமைக்க முயன்ற அதிகாரிகளை, உய்யாலிகுப்பம் மீனவர்கள் தடுத்தனர்.
நேற்று மீன்பிடியை தவிர்த்து, சாலை அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து திரண்டனர். தாங்கள் பட்டா இடமாக கிரயத்திற்கு வாங்கி, மீன்வளத்துறையிடம் ஒப்படைத்த இடத்தில், புதுப்பட்டினம் பகுதி சார்பில், சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
அப்போது, 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிட, செங்கல்பட்டிற்கு படையெடுத்தனர். இரண்டு பகுதி மீனவர்களிடம் மோதல் ஏற்படாமல் தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உய்யாலிகுப்பம் மீனவர்கள், கலெக்டர் அருண்ராஜிடம் நேற்று மனு அளித்தனர். அதன்பின், இப்பிரச்னைக்கு தீர்வு காண, சமாதான கூட்டம் நடத்த, செங்கல்பட்டு சப்- - கலெக்டர் நாராயணசர்மாவிற்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.