/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வழங்க கலெக்டர் வேண்டுகோள்
/
வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வழங்க கலெக்டர் வேண்டுகோள்
வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வழங்க கலெக்டர் வேண்டுகோள்
வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வழங்க கலெக்டர் வேண்டுகோள்
ADDED : டிச 01, 2025 02:37 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை திரும்பி வழங்க, பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம் செய்யூர், ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில், சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த 4ம் தேதி துவங்கி, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள, வீடுகளுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில், மின்மயமாக்கல் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. வாக்காளர் அனைவரும் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம், தங்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து, உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் படிவம் ஒப்படைக்கப்படாத வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். இப்பணியை விரைவாக முடிக்க, பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

