/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
/
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
ADDED : அக் 11, 2025 08:23 PM
செங்கல்பட்டு:வடகிழக்கு பருவ மழைக்கு முன், அனைத்து துறைகளும் திட்ட பணிகளை விரைவாக முடிக்க, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று மு ன்தினம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ஹெலன், பேரிடர் மேலாண்மை திட்ட தாசில்தார் செல்வசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அனைத்து துறைகள் மூலமாக நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் மழைநீர் கால்வாய் துார்வரும் பணிகள் குறித்து, கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின், வடகிழக்கு பருவமழைக்கு முன், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
மின்வாரிய துறையினர் தயாராக இருக்க வேண்டும். சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கினால், உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை, அதிகாரிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.