ADDED : அக் 11, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:சென்னை கிழக்கு கடற்கரை சாலை மேம்பாடு, தனியார் கட்டுமானங்கள் ஆகியவற்றுக்காக, ஏரிகளிலிருந்து கிராவல் மண், எம் சாண்ட் ஆகியவை, லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகிறது.
லாரியிலிருந்து மண் விழுந்து சாலையில் சிதறுவதை தவிர்க்க, தார்ப் பாயால் மூடவேண்டும்.
தார்ப்பாய் மூடாமல் சென்ற நிலையில், 25 லாரி ஓட்டுநர்களிடம் 27,000 ரூபாய் அபராதம் விதித் ததாக, மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.