/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து கல்லுாரி மாணவர் பலி
/
மின்சாரம் பாய்ந்து கல்லுாரி மாணவர் பலி
ADDED : பிப் 14, 2025 01:20 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் பகுதியில், விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டார் இயக்கிய இளைஞர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் புனிதவேல், 20.
இவர், திண்டிவனம் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்தார்.
நேற்று, அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வேர்க்கடலை பயிர்களுக்கு நீர் பாய்ச்ச, மின்மோட்டாரை இயக்கி உள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மாணவர் புனிதவேல் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், புனிதவேலின் சடலத்தை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

