/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆறுமுகசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
/
ஆறுமுகசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 12:36 AM

ஆத்துார்:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில் புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஆறுமுக சுவாமி கோவில் தனியாக உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறும்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் நேற்று துவங்கி, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில், 7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி முருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விழா நாட்களில், தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆத்துார் மற்றும் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருவர்.
விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாகம், முக்தீஸ்வர சேவை சங்கம், திருக்கோவில் பணியாளர்கள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.