/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவான்மியூர் - மாமல்லை இடையே இரவு பேருந்துகளின்றி பயணியர் அவதி
/
திருவான்மியூர் - மாமல்லை இடையே இரவு பேருந்துகளின்றி பயணியர் அவதி
திருவான்மியூர் - மாமல்லை இடையே இரவு பேருந்துகளின்றி பயணியர் அவதி
திருவான்மியூர் - மாமல்லை இடையே இரவு பேருந்துகளின்றி பயணியர் அவதி
ADDED : நவ 03, 2025 10:42 PM
மாமல்லபுரம்:  திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, இரவில் மாநகர பேருந்து இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், பட்டிபுலம், சூலேரிக்காடு, நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள், சென்னை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றர்.
இந்த வகையில், தினமும் ஏராளமானோர் சென்னைக்கு சென்று, இரவு வீடு திரும்புகின்றனர்.
இந்நிலையில் இவர்கள், திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே இயக்கப்படும், தடம் எண்:588 மாநகர பேருந்தையே நம்பியுள்ளனர்.
இப்பேருந்துகள் மிக குறைவாகவே இயக்கப்படுகின்றன.
சென்னை திருவான்மியூரிலிருந்து, இரவு 7:30 மணிக்கு பின், மாமல்லபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மற்ற அரசு பேருந்துகளும் குறைவான அளவே இயக்கப்படும் நிலையில், அதில் மாமல்லபுரம் பயணியரை ஏற்றாமல் புறக்கணிக்கின்றனர்.
இதனால், மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பயணியர், வேன்களில் 150 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டியுள்ளதால், அதிக செலவால் சிரமப்படுகின்றனர்.
எனவே, திருவான்மியூரிலிருந்து இரவு 10:00 மணி வரை, மாமல்லபுரத்திற்கு பேருந்துகள் இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

