/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு
/
திருவிடந்தை கோவில் செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ADDED : நவ 03, 2025 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: கோவளம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், செயல் அலுவலர் பொறுப்பேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் அடுத்த திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், இந்த கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு செயல் அலுவலர் இல்லாமல், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக பணிபுரிந்த விஜயன், தற்போது நித்ய கல்யாண பெருமாள் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு, கடந்த 1ம் தேதி பொறுப்பேற்று உள்ளார்.

