/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
/
புகார் பெட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
புகார் பெட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
புகார் பெட்டி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
ADDED : அக் 08, 2024 01:33 AM

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடி பகுதியில், திருச்சி மார்க்கத்தில் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இது நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இவற்றை சரி செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.மணிகண்டன்,காட்டாங்கொளத்துார்.
அதிவேக ஆம்னி பஸ்களால்
கிளாம்பாக்கத்தில் ஆபத்து
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, தனியார் ஆம்னி பேருந்துகள், நிலையத்தின் பின்புறம் வாசல் வழியாக, அய்யஞ்சேரி பிரதான சாலை, ரேவதிபுரம் கூட்டுச்சாலை வழியாக, ஊரப்பாக்கம்ஜி.எஸ்.டி., சாலைக்கு வந்து செல்கிறது. அவ்வாறுவரும் பேருந்துகள் அதிவேகமாக வருவதால்,அப்பகுதியில் சிறு சிறு விபத்துகளும் நடக்கிறது.
மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, ஒருவித அச்சுறுத்தலுடன் கடக்கின்றனர்.
எனவே, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் பின்புற வழியாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலை வரைமிதமான வேகத்தில் செல்ல, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.கார்த்திக்,ஊரப்பாக்கம்.
வெண்ணாங்குப்பட்டு நிறுத்தத்தில்
நிழற்குடை அமைக்க கோரிக்கை
கடப்பாக்கம் அடுத்த வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளுக்குசெல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.
தினசரி, ஏராளமான பொதுமக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை.
அதனால், மதிய நேரத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், வெயிலில் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், வெண்ணாங்குப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவசக்தி,கடப்பாக்கம்.
திருப்போரூர் பஸ் நிலையத்தில்
சேதமடைந்த இருக்கைகள்
திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து, தாம்பரம், செங்கல்பட்டு, தி.நகர், பிராட்வே, கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து நிலையத்திற்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இங்கு, பயணியருக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டன.
அந்த இருக்கைகள், தற்போது சேதமடைந்துள்ளன. இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர், போதிய இருக்கை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம், சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.கிருஷ்ணன்,திருப்போரூர்.