
சாலை நடுவே பள்ளங்கள் சீரமைக்க கோரிக்கை
சித்தாமூர் அடுத்த பூரியம்பாக்கம் கிராமத்தில், நீர்பெயர் செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் எதிரே சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.கணபதி,
சித்தாமூர்.
சிங்கபெருமாள் கோவில் மாட வீதிகளில் குப்பை தேக்கம்
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் நான்கு மாட வீதிகள் உள்ளன. நான்கு மாட வீதிகளில், ஆங்காங்கே குப்பை தேக்கமடைந்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கோவில் அருகில் உள்ள நான்கு மாட வீதிகளில் தேங்கும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.நரசிம்மன்,
சிங்கபெருமாள் கோவில்.