
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழை நீர் சேமிப்பு தொட்டி மூடி உடைந்து சேதம்
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. அதன் அருகில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேமிப்பு தொட்டியின் மூடி உடைந்துள்ளது.
நகராட்சி அலுவலகத்திற்கு வரி செலுத்த வரும் மக்கள் மற்றும் ஆதார் சேவை மையத்திற்கு வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தவறி விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமின்றி, மழைநீரை சேமிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்கு மூடி அமைத்து, உடனடியாக சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.முரளிதரன், நந்திவரம்.

