/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் பெட்டி :உடைந்த மின்கம்பம் கரும்பாக்கத்தில் பீதி
/
புகார் பெட்டி :உடைந்த மின்கம்பம் கரும்பாக்கத்தில் பீதி
புகார் பெட்டி :உடைந்த மின்கம்பம் கரும்பாக்கத்தில் பீதி
புகார் பெட்டி :உடைந்த மின்கம்பம் கரும்பாக்கத்தில் பீதி
ADDED : டிச 04, 2024 11:09 PM

உடைந்த மின்கம்பம் கரும்பாக்கத்தில் பீதி
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சி கரும்பாக்கம் கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.
இங்கு, பாலுார் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து சாலை ஓரங்களில் மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் சாலை ஓரம் உள்ள மின்கம்பம் அடிப்பகுதியில் உடைந்து, எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், அப்பகுதியை கடந்து செல்லும் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடைகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த உடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
- மணிகண்டன், கரும்பாக்கம்.