/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி புகார் மனு
/
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி புகார் மனு
ADDED : டிச 10, 2024 08:09 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர், அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நந்திவரம் கிராமம் புல எண் 618 மேட்டுத் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள இடத்தை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதனால், இந்த தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை குறுகிவிட்டது.
அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்லும் அளவிற்கு கூட வழி இல்லை. ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் புஷ்பலதா, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.

