/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் இன்ஸ்., மீது உதவி கமிஷனர் ஆபீசில் புகார்
/
மறைமலை நகர் இன்ஸ்., மீது உதவி கமிஷனர் ஆபீசில் புகார்
மறைமலை நகர் இன்ஸ்., மீது உதவி கமிஷனர் ஆபீசில் புகார்
மறைமலை நகர் இன்ஸ்., மீது உதவி கமிஷனர் ஆபீசில் புகார்
ADDED : அக் 25, 2024 01:37 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு யாதவ மகா சபையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து, மறைமலை நகர் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்தனர்.
அவர்கள் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
மறைமலை நகர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராக கோவிந்தராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர், எந்தவித ஆதாரமும் இன்றி, ஒருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு, கருநிலம் பகுதியை சேர்ந்த துரை என்பவர் மீது, வழிப்பறி செய்ததாக வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்துள்ளார்.
மேலும், அவர் அப்பாவி மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் இந்த செயலை கண்டித்து, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு, சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்.
அதனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.