/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் கம்ப்யூட்டர், 'சிசிடிவி' திருட்டு
/
ஊரப்பாக்கத்தில் கம்ப்யூட்டர், 'சிசிடிவி' திருட்டு
ADDED : ஜூலை 10, 2025 09:09 PM
ஊரப்பாக்கம்:லண்டன் நகரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியருக்குச் சொந்தமான ஊரப்பாக்கம் வீட்டில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊரப்பாக்கம் அடுத்த காரணை காட்டூர் கிராமம், சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். தற்போது, இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் நகரில் வசிக்கிறார்.
இவர், ஊரப்பாக்கத்திலுள்ள தன் வீட்டை பராமரிக்கும் பொறுப்பை, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, வெங்கட்ராமன் வீட்டை பூட்டிச் சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது.
தகவலின்படி வந்த கூடுவாஞ்சேரி போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, வீட்டிலுள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.