/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளி அருகில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் அவதி
/
அரசு பள்ளி அருகில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் அவதி
அரசு பள்ளி அருகில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் அவதி
அரசு பள்ளி அருகில் கொட்டி எரிக்கப்படும் குப்பையால் அவதி
ADDED : நவ 22, 2024 12:14 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையோரம் உள்ள காலி இடத்தில், பிளாஸ்டிக் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டி, தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ -- மாணவியர் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில், பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குப்பையை தெரு நாய்கள் கிளறி, சாலைக்கு இழுத்து வருகின்றன. மேலும், குவிந்துகிடக்கும் குப்பையில் மர்ம நபர்கள் தீ வைப்பதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றத்துடன் புகை பரவுகிறது.
அதனால், பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பகுதியில் உள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.