/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் வாகனங்கள் அணிவகுப்பு நுழைவு கட்டணம் வசூலால் நெரிசல்
/
மாமல்லையில் வாகனங்கள் அணிவகுப்பு நுழைவு கட்டணம் வசூலால் நெரிசல்
மாமல்லையில் வாகனங்கள் அணிவகுப்பு நுழைவு கட்டணம் வசூலால் நெரிசல்
மாமல்லையில் வாகனங்கள் அணிவகுப்பு நுழைவு கட்டணம் வசூலால் நெரிசல்
ADDED : டிச 13, 2024 01:56 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், நுழைவுக் கட்டண வசூலுக்காக, சுற்றுலா வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கட்டண வசூல் பகுதிகளை, போக்குவரத்து பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணியர் கண்டு ரசிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம், பயணியரின் கார், வேன், பேருந்து, இருசக்கர வாகனம் ஆகிய வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது. பேரூராட்சி ஊழியர்கள், கோவளம் சாலையில், புறவழிப்பாதை சந்திப்பு அருகில் மற்றும் திருக்கழுக்குன்றம் சாலையில், பகிங்ஹாம் கால்வாய் பாலம் அருகில், பேரூராட்சி ஊழியர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர்.
வார இறுதி, அரசு விடுமுறை ஆகிய நாட்களில், சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் குவிகின்றன. ஊழியர்கள் சாலையில் வாகனங்களை மடக்கி நிறுத்தி, கட்டணம் வசூலிக்கின்றனர்.
அப்போது, ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் குவிந்து, கட்டண வசூலுக்காக காத்திருக்கும் போது, கோவளம் சாலையில், புதுச்சேரி புறவழி சந்திப்பையும் கடந்து வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பாக, பகிங்ஹாம் கால்வாய் பால பகுதியில், அரசு மருத்துவமனை சந்திப்பு வரை அணிவகுக்கின்றன.
இச்சிக்கலால், பிற வாகனங்கள் செல்ல முடியாமல், எதிர் திசை வாகனங்களும் வர முடியாமல், போக்குவரத்து முடங்குகிறது.
அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் ஆகியவையும் செல்ல முடியவில்லை.
இதை தவிர்க்க, கட்டண வசூல் பகுதிகளை, போக்குவரத்திற்கு பாதிப்பற்ற வகையில் இடம் மாற்றவும், சாலையோரம் தடுப்பு ஏற்படுத்தி, அதற்குள் வாகனங்களை வரிசையாக அனுமதிக்கவும், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.

