/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பத்து அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
/
செங்கையில் பத்து அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
செங்கையில் பத்து அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
செங்கையில் பத்து அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டட பணி துவக்கம்
ADDED : ஜன 30, 2025 10:28 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு மேல் நிலைப்பள்ளிகளில், கூடுதல் கட்டடம் கட்டும்பணி துவங்கியது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், பத்து அரசு மேல் நிலைப்பள்ளிகளில், அதிகமான மாணவர்கள் படிப்பதால், கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என, அரசுக்கு, முதன்மை கல்வி அலுவகம் மூலம், கருத்து அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பின், நபார்டு திட்டத்தில், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு, தலா எட்டு கூடுதல் வகுப்பறைகள், ஒரு ஆய்வகம் கட்ட 6 கோடியே 74 லட்சம் ரூபாய். அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், எலப்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு தலா எட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்ட 6 கோடியே 8 லட்சம் ரூபாய்.
வெங்கப்பாக்கம், திருப்போரூர், ஒரத்தி அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு, கூடுதல் வகுப்பறைகள் தலா 4 கட்ட 3 கோடியே 52 லட்சம் ரூபாய். கண்டிகை அரசு மேல் நிலைப்பள்ளிக்கு பத்து வகுப்பறைகள் கட்ட 2 கோடியே 35 லட்சம் ரூபாய் என, மொத்தம் 19.41 கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இப்பணிகளுக்கு பொதுப்பணித்துறையினர் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். இப்பள்ளிகளில், பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்ட கடந்த சில தினங்களுக்கு முன், பூமி பூஜை நடந்தது. தற்போது, பணிகள் துவங்கி நடந்துபணிகள் அனைத்தும் ஆறு மாதங்களில் முடிக்கப்படும் என, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.