/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் தொட்டி கட்டும் பணி ரூ.5.45 கோடியில் துவக்கம்
/
குடிநீர் தொட்டி கட்டும் பணி ரூ.5.45 கோடியில் துவக்கம்
குடிநீர் தொட்டி கட்டும் பணி ரூ.5.45 கோடியில் துவக்கம்
குடிநீர் தொட்டி கட்டும் பணி ரூ.5.45 கோடியில் துவக்கம்
ADDED : மார் 18, 2024 03:14 AM
சென்னை, : பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23 இடங்களில், 94 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, குடிநீர் வழங்கப்படுகிறது.
வினியோகத்தில் பற்றாக்குறை உள்ளதால், ஓ.எம்.ஆரில் இருந்து தனியாக குழாய் அமைத்து, கூடுதல் நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவில் இரண்டு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட, 5.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, நேற்று முன்தினம் காலை துவங்கியது. நான்கு மாதங்களில் பணி முடிக்கப்படும் என வாரிய அதிகாரிகள் கூறினர்.