sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

45 கி.மீ., நீள சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்

/

45 கி.மீ., நீள சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்

45 கி.மீ., நீள சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்

45 கி.மீ., நீள சாலைகளை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் துவக்கம்


ADDED : நவ 08, 2024 09:24 PM

Google News

ADDED : நவ 08, 2024 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் உள்ளது.

இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டங்களில், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், 1,283.504 கி.மீ., நீள சாலைகள் உள்ளன.

இந்த கோட்டங்களில், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள சாலைகளில் பெரும்பாலானவை, போக்குவரத்துக்கு பயனற்றவையாக உள்ளதால், அடிக்கடி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள் பழுதாகி நின்று விடுகின்றன.

இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனை, அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு சென்று வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறை கள ஆய்வு செய்து, 75 கி.மீ., சாலைகள், சிறுபாலங்கள் அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024 - 25ம் நிதியாண்டில், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.

இந்நிதியின் வாயிலாக, 45 கி.மீ., சாலைகளை சீரமைத்து, இரண்டு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன. 45 சிறுபாலங்கள் கட்டடப்படுகின்றன. இந்த பணிகளுக்கான டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில், 45 கி.மீ., சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. 45 சிறுபாலங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. கட்டுமானப் பணிகளுக்கு, இம்மாதம் டெண்டர் விடும் பணி முடிந்தவுடன், பணிகள் துவங்கி, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும்.

- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,

செங்கல்பட்டு.

சீரமைக்கப்படும் சாலைகள், சிறுபாலங்கள்


திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி வரை 1.4 கி.மீ., சாலை புதிதாகவும், மூன்று சிறுபாலங்கள் கட்ட 3.4 கோடி ரூபாய்.மங்கலம் - பட்டிக்காடு சாலை 5 கி.மீ., புதிதாக அமைக்க 4.65 கோடி ரூபாய்.
பொன்விளைந்தகளத்துார் - வல்லிபுரம் வரை 4 கி.மீ., புதிதாக சாலையும், ஏழு சிறுபாலங்களும் அமைக்க, 4.96 கோடி ரூபாய்.
பவுஞ்சூர் - அணைக்கட்டு வரை 4 கி.மீ., சாலையும், மூன்று சிறுபாலங்களும் அமைக்க 4.4 கோடி ரூபாய்.
செய்யூர் - வந்தவாசி சாலையில், வில்லிவாக்கத்தில் 3.2 கி.மீ., புதிய சாலையும், ஐந்து சிறுபாலங்கள் அமைக்க, 3.5 கோடி ரூபாய்.
ஒணம்பாக்கம் - பெரியவெண்மணி வரை 3 கி.மீ., சாலை புதிதாக அமைக்க, 3.4 கோடி ரூபாய். நீர்பெயர் - தொன்னாடு இடையே, 1.8 கி.மீ.,க்கு, ஒரு வழிச்சாலையை இருவழிச்சாலையாக மாற்றி புதிதாக அமைக்க 3 கோடி ரூபாய்.திருக்கச்சூர் - பேரமனுார் இடையே, 1.2 கி.மீ., சாலையும், ஆறு சிறுபாலங்களும் அமைக்க, 2.7 கோடி ரூபாய்.இதுமட்டும் இன்றி பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் அனைத்திற்கும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளன.








      Dinamalar
      Follow us