/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் கட்டட கழிவு குவிப்பு வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
/
சாலையோரம் கட்டட கழிவு குவிப்பு வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
சாலையோரம் கட்டட கழிவு குவிப்பு வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
சாலையோரம் கட்டட கழிவு குவிப்பு வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்
ADDED : மார் 19, 2025 12:17 AM

மறைமலைநகர்:சிங்கபெருமாள்கோவில் - அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை தென்மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தங்களின் அடிப்படை தேவைகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், தென் மேல்பாக்கம் பகுதியில் சாலையோரம், கட்டட கழிவு பொருட்கள் குவியல்களாக கொட்டப்பட்டு உள்ளன. இதனால், இச்சாலையில் விபத்து அபாயம் நீடிக்கிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இதுபோன்று கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால், இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் கொட்டப்பட்டு உள்ள கட்டட கழிவுகள் இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயிலும் இந்த கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளதால், கழிவுநீர் வெளியேற வழியின்றி, கால்வாயில் தேங்குகிறது.
எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கட்டட கழிவுகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.