/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
பகுதி நேர நியாய விலை கடை கட்டுமான பணிகள் துவக்கம்
/
பகுதி நேர நியாய விலை கடை கட்டுமான பணிகள் துவக்கம்
பகுதி நேர நியாய விலை கடை கட்டுமான பணிகள் துவக்கம்
பகுதி நேர நியாய விலை கடை கட்டுமான பணிகள் துவக்கம்
PUBLISHED ON : டிச 27, 2025 05:52 AM

அச்சிறுபாக்கம்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கரிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துார் பகுதியில், நியாய விலை கடைக்கு கட்டடம் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிக்கிலி ஊராட்சியில் சித்தாமூர், கொளத்துார், கிருஷ்ணாபுரம் கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள், 3 கி.மீ., துாரம் நடந்து சென்று, கரிக்கிலியில் உள்ள நியாய விலைக்கடையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி வந்தனர்.
இதனால் முதியவர்கள், ஊனமுற்றோர் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும், பருவ மழை காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
எனவே, கரிக்கிலி கூட்டுறவு நியாய விலை கடையிலிருந்து பிரித்து, பகுதி நேர நியாய விலை கடை அமைக்க வேண்டுமென, ஊராட்சி சார்பில் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், 2024 -- 2025ம் நிதியாண்டில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கொளத்துார் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடைக்கு கட்டடம் கட்டும் பணிகள், துவங்கி நடைபெற்று வருகின்றன.

